ராஜபக்சவுக்கு எதிராக பொதுவேட்பாளர்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் அமைச்சர் மைத்ரிபால ஸ்ரீசேனா போட்டியிடுகிறார்.

இலங்கை அதிபர் தேர்தலுக் கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போதைய அதிபர் ராஜபக்ச நேற்றுமுன்தினம் வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான 22 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்பாளர்களின் பிரச்சாரத்துக் காக 28 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ஜனவரி தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

இலங்கையில் தற்போது ராஜபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது. அதன் சார்பில் மூன்றாவது முறையாக ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங், மூத்த தலைவர்கள் கரு ஜெயசூர்யா, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோ ரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராஜபக்ச அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபால ஸ்ரீசேனா பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்புல் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மைத்ரி பால ஸ்ரீசேனா அண்மை யில் அமைச் சர் பதவியில் இருந்து விலகினார்.

அதிபர் ராஜபக்சவுக்கும் மைத்ரி பால ஸ்ரீசேனாவுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. அவரை சமாதானப்படுத்தும் வகை யில் பிரதமர் பதவியை அளிக்க ராஜபக்ச முன்வந்தார். ஆனால் அதனை மைத்ரிபால ஸ்ரீசேனா ஏற்கவில்லை. அவர் அப்போது முதலே எதிர்க்கட்சிகளுடன் தொடர் பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

மேலும்