டோக்லாமில் இந்தியா படைகளை திரும்பப் பெற்றபின் நாங்களும் திரும்பப் பெறுவோம்: சீனா

By ஏபி

டோக்லாம் பகுதியில் இந்தியா படைகளைத் திரும்பப் பெற்று கொண்ட பின்னர் நாங்களும் படைகளைத் திரும்ப பெறுவோம் என்று சீனா கூறியுள்ளது.

டோக்லாம் பகுதியில் இந்தியா, பூடான், சீனா எல்லைகள் வருகின்றன. அங்கு தற்போதுள்ள நிலையை மாற்றி சாலை அமைக்க சீனா முயற்சித்தது. அதை இந்தியப் படைகள் தடுத்துவிட்டன.

இதனால் டோக்லாம் பகுதியில் சீனா ராணுவத்தை குவித்தது. பதிலுக்கு இந்தியாவும் படைகளை குவித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை நீக்க இந்தியா - சீனா இரு நாடுகளும் தங்கள் படைகளைத் திரும்ப பெற இருப்பதாகவும், இதற்கு சீனா சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியப் படைகளை திரும்பப் பெற்ற பிறகு நாங்களும் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வோம் எனறு சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, "இந்தியப் படைகளை அங்கிருந்து திரும்ப பெற்றவுடன் சீனாவும் தனது படைகளை திரும்ப பெறும். சீனா அதன் இறையாண்மை மற்றும் வரலாற்று மரபை தொடர்ந்து பின்பற்றி பிராந்திய ஒருமைப்பாட்டை நிலை நாட்டும்"என்றார்.

டோக்லாம் பகுதி பூடானுக்கு சொந்தமான பகுதி என்று கூறப்பட்டுவரும் நிலையில் ,சீனா- பிரிட்டன் உடன்படிக்கையின்படி சீனாவுக்கு உரிமையானது என்று அந்நாடு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்