பாகிஸ்தானில் கராச்சி வழியே சென்று கொண்டிருந்த பேருந்து, லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் 56 பேர் பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுக்கூர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று கராச்சி நோக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது தூக்கக் கலக்கத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் எதிர் சாலையில் வந்துகொண்டிருந்த லாரி மீது மோதினார்.
இந்த பயங்கர விபத்தில் பேருந்து முற்றிலுமாக சிதைந்துபோனது. விபத்துக்கு 8 பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 56 பேர் பலியாகியுள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சுமார் 20 பேர் விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஓட்டுநரின் அலட்ச்சியத்தினாலும், பைபாஸ் சாலையில் இரு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்து மோதியதாலும் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago