‘த்ரில்’ அனுபவத்திற்காக 86 நோயாளிகளைக் கொலை செய்த ஜெர்மனி ஆண் நர்ஸ்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

By ராய்ட்டர்ஸ்

ஜெர்மனியில் நோயாளிகளுக்கு ஊசிமருந்து மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளைக் கொலை செய்ததாக ஆண் நர்ஸ் மீது பரபரப்பு புகார் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

நீல்ஸ் ஹீகல் என்ற இந்த 40 வயது ‘சீரியல் கில்லர்’ 1999-2002-ம் ஆண்டுகளில் ஓல்டன்பர்க் மருத்துவமனையிலும், டெல்மென்ஹார்ஸ்ட் மருத்துவமனையில் 2003 முதல் 2005 வரையிலும் நர்ஸாகப் பணியாற்றி வந்தவர். இவர் 2015-ம் ஆண்டு இரண்டு கொலைகள் மற்றும் இரு கொலை முயற்சிகள் தொடர்பாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர் குறைந்தது 43 நோயாளிகளையாவது கொன்றிருப்பார் என்று வழக்கறிஞர்கள் தரப்பு ஐயம் எழுப்பியது.

இதனையடுத்து சில நோயாளிகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மரணங்கள் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.

விசாரணையின் போது கொலையாளி நீல்ஸ் ஹீகல், சுமார் 90 நோயாளிகளுக்கு மாரடைப்பு வருமாறு மருந்துகளைக் கொடுத்து பிறகு அவர்கள் இருதயத்தை தன் சொந்த முயற்சியில் மீள் இயக்கத்துக்கு கொண்டு வரும் நடைமுறை தனக்கு த்ரில்லிங்காக இருந்ததாகவும் அம்மாதிரி சிகிச்சை அளித்து பிழைத்தவர்கள் மத்தியில் தான் ஒரு ஹீரோவாகி விடும் ஒரு த்ரில்லுக்காகவும் தான் இதனைச் செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அதாவது இவர் பணியாற்றிய இரண்டு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிறகு அவர்களைப் பிழைக்க வைப்பதில் தனக்கு த்ரில் இருந்ததாகவும் ஹீரோ ஆகும் விருப்பம் தன்னிடம் இருந்ததாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டார்.

போலீஸ் தலைமை அதிகாரி ஜொஹான் கியூமே கூறும்போது, “84 கொலைகள் எங்களை வாயடைக்கச் செய்து விட்டது. இவையெல்லாம் போதாதென்பது போல் நீல்ஸ் செய்த கொலைகளின் பரிமாணம் இன்னும் பல மடங்கு மோசமானவற்றை நமக்கு காட்டப்போகிறது என்பதே” என்றார்.

உட்புற நோயாளிகளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்ததன் காரணங்களை மருத்துவமனை அதிகாரிகள் சரிவர ஆராயவில்லை அவர்கள் அப்போதே போலீஸ், சட்ட வல்லுநர்கள் ஆகியோரை அழைத்திருந்தால் நீல்ஸ் கொலை செய்வதை ஒருவேளை நிறுத்தியிருப்பான்” என்றார்.

தற்போது நீல்ஸ் தன் த்ரில் அனுபவத்திற்காக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 84 பேர்களின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 134 சடலங்கள் இந்தக் கொலை தொடர்பாக தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சீரியல் கில்லரை அடையாளம் கண்டு கொண்டதில் ஜெர்மன் போலீஸார், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்