ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வழிமுறையை கண்டறிந்த இளைஞர் கைது

By ஏபி

உலக நாடுகளின் வர்த்தக நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை முடக்கிப்போட்ட ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வழிமுறையை கண்டறிந்த பிரிட்டன் இளைஞரை எஃப்பிஐ அமெரிக்காவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் உலகின் பல்வேறு வணிக நிறுவனங்களை முடக்கி போட்ட, வான்னா கிரை எனும் பெயரிலான வார்ம் மூலம் பரவிய இந்த வைரஸ், அரசு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை முடக்கிப்போட்டது.

இந்த வைரஸ்களிடமிருந்து கணினிகளை விடுவிக்கும் முறையை கண்டறிந்தவராக அறியப்படும், மார்கஸ் ஹட்சின்ஸை வியாழக்கிழமை எஃப்பிஐ அதிகாரிகள் அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கடவுச் சொற்களை கண்டறிவதற்கான ஸ்பாட்வேரை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

ஹட்சின்ஸின் கைது குறித்து சைபர் செக்யூரிட்டி ஆய்வாளரும், அவருடன் பணிபுரிந்தவருமான ஜேக் வில்லியம்ஸ், “ஹட்சின்ஸ் குற்றம் புரிந்திருக்கிறார் என்று என்னால் நம்ப முடியவில்லை.” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்