பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் வேனை ஓட்டியவர் 18 வயதான இளைஞர் என்று போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்பெயின் பார்சிலோனா நகரிலுள்ள சுற்றுலாத் தலமான லாஸ் ராம்பலாஸில் மக்கள் கூட்டம் கூடியிருந்த நிலையில் வெள்ளை வேன் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்ததத்தில் 13 பேர் பலியாகினர். சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்த வேனை ஓட்டியவர் 18 வயதான மொசா உக்காபீர் என்ற இளைஞர்தான் என்று ஸ்பெயின் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களில் டிரிஸ் உக்காபீர் என்பவரின் சகோதரர்தான் இந்த மொசா உக்காபீர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மொசா உக்காபீரை ஸ்பெயின் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்தியின்படி பார்சிலோனா தாக்குதலில் பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago