எனது போராட்டத்தில் நான் பின்வாங்கப் போவதில்லை என்று ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளரான நாதன் லா தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் சீனாவுடன் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்கள் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2014-ம் ஆண்டு சீனாவில் வெடித்த அம்பரல்லா மூம்மண்ட் போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தியர்வர்களில் ஒருவர் நாதன் லா (24).
இப்போராட்டத்தின் மூலம் மக்களிடம் நம்பிக்கைக்குரியவரன நாதன் லா அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடந்த ஹாங்காங் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் இதில் சீன எதிர்ப்பு கொள்கை கொண்ட சிலரும் வெற்றி பெற்றனர்.
ஆனால் இந்த வெற்றிக்குரிய அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்காமல் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சீனா அரசு பெரும் முயற்சகளை மேற்கொண்டது. நாதன் லா, ட்வர்ட் இயு, லாவ் சியு-லாய், லியுங் கவோக் ஆகியோருக்கு எதிராக சட்ட நடைமுறைகளை ஹாங்காங் அரசும் தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தபோது, நாதன் லா, யாவ் வெய்-சிங், வியுங் ஆகியோர் சத்திய வாக்குகளை தெரிவித்து, சீனாவுக்கு எதிராக தரக்குறைவான சொற்களை பயன்படுத்தியதால் அவர்களின் உறுதிமொழி செல்லாது என்றும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அரசு கூறியது.
இதில் சீனாவின் தலையீடு உள்ளதாகவே நாதன் லா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் நாதன் லா உள்ளிட்ட நான்கு பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து ஹாங்காங் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து நாதன் லா கூறும்போது, "சீனாவின் அணுகுமுறை மிக தெளிவானது. ஹாங்காங்கில் அவர்களுக்கு எதிராக குரல் எழும்போது அவர்கள் ஒடுக்க எண்ணுவார்கள். அவர்கள் முற்போக்கு வாதிகளுக்கு எதிராக குச்சியை பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவர்களுக்கு கேரட்டை அளிப்பார்கள் இதுதான் அவர்களது குணம்.
இப்போது நான் நாடாளுமன்றதிலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளேன். எனது இருக்கை அங்கு இல்லை. நான் திரும்பவும் முதலிலிருந்து துவங்க வேண்டும். ஒருவேளை நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் அதைப் பெறுவேன்.
எனது தோளில் நிறைய கடமைகள் உள்ளன., நான் என் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டேன்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago