சீனா மனித உரிமை ஆர்வலர் லி ஜியாபோ சிறையில் மரணம்

By ஏஎஃப்பி

புற்றுநோயால் அவதிப்பட்ட நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலரான சீனாவின் லி ஜியாபோ (61) மரணத்தைத் தழுவினார்.

சீனாவின் அரசியலைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த அவர், கடந்த 2009-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய் யப்பட்டார். அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற் கிடையே லி ஜியாபோவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமைதிக் கான நோபல் பரிசு கிடைத்தது.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரை விடுதலை செய்யக் கோரி, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீன அரசைக் கேட்டுக் கொண்டன. மேலும் அவருக்கு தங்கள் நாடுகளில் உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் கூறியதை சீன அரசு புறம்தள்ளியது.

கடந்த ஒரு மாதமாக உயர் பாதுகாப்புடன் சீன மருத்துவ பல்கலைக்கழக மருத்துவம னையில் அவருக்கு மருத்து வர்கள் சிகிக்சை அளித்தனர். 3 தினங்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்