பிரான்ஸ் நடிகை ஜூலி கேயட் உடன் அந்நாட்டு அதிபர் பிரான்ஷூவா ஹொலாந்த் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியான விவகாரத்தில் அதிபர் மாளிகை ஊழியர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஷூவா ஹொலாந்த் ஜூலி கேயட் இடையிலான உறவு தொடர் பான செய்திகள் கடந்த ஜனவரி யில் நாளேடுகளில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன.
இந்நிலையில் அதிபர் மாளிகையில் அதிபரின் தனிப்பட்ட அறையில் பிராங் கோயிஸ் ஜூலி கேயட் அமர்ந்திருப்பது போன்ற 3 புகைப்படங்கள் கடந்த வாரம் வெளியாகின. இவை கடந்த அக்டோபர் மாதம் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டதாக ‘வாய்ஸி’ இதழ் கூறியிருந்தது.
முந்தைய அதிர்ச்சியில் இருந்து பிரான்ஷூவா ஹொலாந்த் இன்னும் மீண்டுவராத நிலையில், தற்போது புகைப்படங்கள் வெளியான விவகாரம் அவரை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. அதிபரின் தனிப்பட்ட ஊழியர்களில் ஒருவர் தனது செல்போன் மூலம் இந்த படத்தை எடுத்திருக்கலாம் என அதிகாரிகள் கருதினர். எனினும் விசாரணையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸி பதவிக்காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட 5 ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago