ஞாயிறன்று மத்திய கோர் மாகாணத்தில் ஒரு மருத்துவமனையை தாலிபன் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அதில் அங்கிருந்த 35 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிபரின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஆப்கன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஷா ஹுசைன் முர்டாஸ்வி தெரிவித்ததாவது:
"மத்திய கோர் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனையில் இருந்த 35 பேரை அவர்கள் கொன்றனர், அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். அவர்கள் நோயாளிகளையோ அல்லது பணியாளர்களையோ என்று குறி வைத்து இத்தாக்குதலை நடத்தவில்லை, இது மனிதகுலத்திற்கு எதிரான கொடூரமான குற்றமாகும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் தாலிபன் தீவிரவாதிகளுக்கு கடந்த ஜூன் மாதம் (2017) ஆப்கன் அதிபர் ''கடைசி வாய்ப்பு தருகிறேன். பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்'' என்று தாலிபன் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைபபு விடுத்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago