வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு சீனா, ரஷ்யாவே காரணம்: அமெரிக்கா

By ஏஎஃப்பி

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு சீனாவும், ரஷ்யாவுமே காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடகொரியா வெள்ளிக்கிழமை நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது.

இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வெளியிட்ட அறிக்கையில், “வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் ஸ்திரதன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதற்கு ரஷ்யாவும், சீனாவுமே முக்கிய காரணம்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறும்போது,” வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறியிருந்தார்.

அமெரிக்க செனட் சபையில் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்க நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்