கடந்த இரு நாட்களாக வன்முறை நிலவி வந்த அமெரிக்காவின் பெர்குசன் நகரில் நேற்று சற்று அமைதி ஏற்பட்டது.
மிசவுரி மாகாணம் பெர்குசன் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வெளியானது. அதில் கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி மீது குற்ற வழக்கு தேவையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது கருப்பின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெர்குசன் நகரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்தது போலீஸ் வாகனங்கள், பொது சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதையடுத்து பெர்குசன் நகரில் பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று வன்முறை குறைந்து அங்கு அமைதி திரும்பியுள்ளது. எனினும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago