சிரியாவில் சரீன் விஷ வாயுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி யிருப்பது உண்மைதான் என்று ரசாயன ஆயுதங்கள் தடை கண் காணிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக கோரி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளும் பயங்கர வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க சிரியா அரசு வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி சிரியாவின் கான் ஷேக்ஹவுன் என்ற நகர் மீது விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் உயிரிழந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று கூறப்பட்டது.
அன்றைய தினம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ரசாயன ஆயுதங்களைக் கண்காணித்து வரும், ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு தீவிர விசாரணை நடத்தியது. இந்த அமைப்பின் உண்மை கண்டறியும் குழு சிரியாவில் விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்டவர்கள், தாக்குதலை பார்த்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் முடிவில், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நடத்திய தாக்குதலில் சரீன் எனப்படும் கொடிய விஷவாயு பயன்படுத்தி இருப்பது உறுதியாகி உள்ளது.
உண்மை கண்டறியும் குழு கூறும்போது, ‘‘சிரியாவில் நடந்த தாக்குதலில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் இறந்துள்ளனர். அவர்கள் சரீன் வாயுவால் அல்லது சரீன் போன்ற பொருளால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாக தெரிகிறது. சரீன் வாயுவை ரசாயன ஆயுதமாக பயன்படுத்தி உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும்போது, ‘‘சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி உள்ளனர் என்ற மறுக்க முடியாத உண்மை இப்போது அம்பலமாகியுள்ளது. அந்த ஆயுதங்களை யார் பயன்படுத்தினார்கள் என்ற உண்மையை கண்டறிய அதிகாரத் தில் உள்ளவர்கள் குறுக்கீடு இல்லாத சுதந்திரமான விசாரணை அவசியம். அப்போதுதான் இதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த முடியும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய முடியும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago