ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு: ஒபாமா - புதின் சந்திப்பு இல்லை - ரஷ்யா அறிவிப்பு

By பிடிஐ

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள தங்கள் நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச மாட்டார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. 7,8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உட்பட ஜப்பான், தென்கொரியா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பெய்ஜிங் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இச்சுற்றுப் பயணத்தின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒபாமா சந்திக்கவுள்ளார்.

சீன சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, மியான்மரில் நடைபெறவுள்ள கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்ற பின், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் ஒபாமா பங்கேற்கவுள்ளார். இப்பயணத்தின் போது, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்றுள்ளார். ஆனால், அவரும் ஒபாமாவும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது குறித்த இம்மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 21 நாடுகள் பங்கேற் றுள்ளன. இந்நாடுகள் உலக அளவில் 44 சதவீத வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்