ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவு கோலில் 7.8 என்று பதிவானது, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது.
உள்ளூர் நேரம் 11.34 மணிக்குத் தாக்கிய இந்தப் பூகம்பத்தின் மையம் நிகல்ஸ்கோயே நகரத்துக்கு 200கிமீ தொலைவில் இருந்தது. கடலில் 10 கிமீ ஆழத்திலேயே இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, மேலும் அருகில் மக்கள் தொகை நிரம்பிய ஊர்கள் இல்லாததால் இதுவரை உயிரிழப்பு பற்றிய தகவல்கள் இல்லை.
முதலில் ஆழிப்பேரலைகள் 1 முதல் 3 அடி உயரத்துக்கு எழும்பும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் தொகை குறைவாக இருந்த ஷெம்யாவில் 6 அங்குல உயரத்துக்கு மட்டுமே அலைகள் எழும்பி அடங்கியது. பிற்பாடு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
ஒருவேளை டெக்டானிக் பிளேட்டுகள் நகர்வு கிடைக்கோட்டு வசமாக இருந்திருக்கலாம் என்பதால் பெரிய விளைவுகள் ஏற்படாமல் இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர், நகர்வு குத்துக்கோட்டுவசமாக ஏற்பட்டிருந்தால் பெரிய சேதங்களும் சுனாமியும் தவிர்க்க முடியாதது.
ஆனாலும் இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏகப்பட்ட பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன, ஒவ்வொன்றுமே 5.0 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago