கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல இரண்டாவது ஏவுகணைச் சோதனை முக்கிய அமெரிக்க நகரங்களையும் இலக்காக்கும் திறன் கொண்டது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ உள்ளிட்ட அமெரிக்காவின் பரந்துபட்ட பகுதிகளை இந்த இரண்டாவது ஏவுகணை இலக்காக்கவல்லது என்கிறார் வடகொரியா அதிபர்.
ஹுவாசாங்-14 ஏவுகணை 3,725 மீ உயரத்தை எட்டியதும் சுமார் 998 கிமீ அது செல்லக்கூடியதுமாக அமைந்திருப்பதும் ‘திருப்தி’ அளிப்பதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்ததாக கொரியன் செண்ட்ரல் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பான் தண்ணீரில் வெற்றிகரமாக இறங்கியதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
இது பரந்துபட்ட பகுதிகளை நோக்கி செலுத்தப்பட கூடியது என்பதோடு ’பெரிய அளவிலான கனரக அணு ஆயுதத்தை சுமந்து சென்று தரையில் இறக்கவல்லது’ என்று அந்த நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் சென்ரு தாக்கக்கூடிய முதல் ஏவுகணை அலாஸ்கா வரை செல்லக்கூடியது என்று கூறிய ஆய்வாளர்கள் இரண்டாவது ஏவுகணை கூடுதல் தூரம் சென்று கூடுதல் நகரங்களை இலக்காக்கவல்லது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வடகொரிய ஏவுகணைச் சோதனையை அடுத்து அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் துரிதகதி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இதனையடுத்து அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ஏவுகணை அழிப்பு ராணுவ அமைப்புகளை அங்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டிய தேவையுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.
வடகொரியாவின் இந்த 2 வது ஏவுகணை ஜப்பான் ஹொக்காடியோ தீவுகளில் லேண்ட் ஆனதாக ஜப்பானிய அரசு செய்தித் தொடர்பாளர் யோஷிஹிதே சுகா தெரிவித்தார்.
அதிபர் கிம், எந்த நேரத்திலும் எந்த ஒரு இடத்தையும் தாக்கவல்ல ஏவுகணையாக இது அமைந்ததற்கு திருப்தி வெளியிட்டதாகவும் தற்போது அமெரிக்காவின் முக்கிய பகுதிகளும் இந்த தாக்குதல் வட்டத்துக்குள் வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
‘அர்த்தமற்ற கூச்சல் போடும் அமெரிக்காவுக்கு இது ஒரு எச்சரிக்கை” என்று கிம் கூறியதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டேவிட் ரைட் என்ற பவுதிக விஞ்ஞானி இது பற்றி கூறும்போது, ஏவுகணை பற்றிய வடகொரியாவின் கணக்கு சரியெனில், அது லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், சிகாகோ உள்ளிட்ட நகரம் வரை வரக்கூடிய திறன் கொண்டது என்கிறார்.
இது உலகிற்கு பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடுமையாக வடகொரியாவை கண்டித்துள்ளார். வடகொரியா தன் பாதுகாப்பு அதிகரித்துவிட்டதாக நினைக்கலாம் ஆனால் இதனால் எதிர்மறை விளைவுகளே ஏற்படும். இது வடகொரியாவை மேலும் தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை நலிவுறச் செய்து தன் மக்களையே அவதிக்குள்ளாக்கும் செயல் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago