ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கை, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்த பெண் பயணியுடையதாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டேனியல் ரோச்சி. விமான விபத்துகள் நடந்த இடங்களில் பல ஆண்டுகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார். பல தடயங்களையும் கண்டுபிடித்துத் தந்துள்ளார். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பகுதியில் ஆல்ப்ஸ் பனிமலையில் மிக உயரமான மான்ட் பிளாங்க் என்ற மலையில் தேடுதல் வேட்டை நடத்தினார். குறிப்பாக ‘போஸன்ஸ் கிளேசியர்’ என்ற மிகப்பெரிய பனிமலையில் தேடுதல் வேட்டை நடத்தினார்.
அப்போது மனிதர்களின் சிதைந்த உடல் உறுப்புகளை கடந்த வியாழக்கிழமை டேனியல் கண்டெடுத்தார். ஒரு கை, ஒரு கால் என 2 உடல் உறுப்புகளை கண்டெடுத்த டேனியல் அவற்றின் புகைப்படங்களை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
டேனியல் தேடுதல் வேட்டை நடத்திய மான்ட் பிளாங்க் என்ற இடத்தில்தான் கடந்த 1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா போயிங் விமானம் 707 விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. பம்பாயிலிருந்து நியூயார்க் செல்லும்போது மான்ட் பிளாங்க் என்ற மலைப் பகுதியில் விமானம் நொறுங்கியது. அதில் சென்ற பிரபல அணு விஞ்ஞானி ஹோமி பாபா உட்பட 117 பயணிகளும் பரிதாபமாக இறந்தனர். அவர்களில் ஒருவருடைய கையாக இருக்கலாம் என்று டேனியல் கூறியுள்ளார்.
அதற்கு முன்னதாக கடந்த 1950-ம் ஆண்டு அந்த மலைப் பகுதியில் மற்றொரு ஏர் இந்தியா விமானம் நொறுங்கியுள்ளது. அதில் சென்ற 48 பேர் இறந்துவிட்டனர்.
இதுகுறித்து டேனியல் கூறும் போது, ‘‘இதற்கு முன்னர் குறிப்பிடத் தக்க வகையில் இதுபோல் மனித உடல் உறுப்புகளை கண்டுபிடிக்க வில்லை. நான் கண்டெடுத்த கை பெண்ணுடையதாக உள்ளது’’ என்று ஏஎப்பி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தான் கண்டெடுத்த உடல் உறுப்புகள் குறித்து மான்ட் பிளாங்க் பகுதியில் உள்ள சமோனிக்ஸ் பள்ளத்தாக்கின் உள்ளூர் அவசர சேவைப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் ஹெலிகாப்டரில் அந்த உறுப்புகள் மலையடிவாரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிதைந்த உறுப்புகளை நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னர் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரி கிறது.
பத்து நாட்களுக்கு முன்னர்தான் சுவிட்சர்லாந்து பகுதியின் ஆல்ப்ஸ் பனி மலையில் 2 உடல்கள் அருகருகில் கண்டெடுக்கப்பட்டன. அந்த உடல்களை மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்தி பார்த்தனர். அப்போது, 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன 40 வயதான ஷூ உற்பத்தியாளர் மார்சிலின் டுமவுலின் மற்றும் 37 வயதான அவரது மனைவி பிரான்சினியின் உடல்கள் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
23 hours ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago