அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, விசா மோசடியில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் துணைத் தூதர் ஒருவர் கைது செய்யப்பட்டது, இந்தியத் தூதரக அளவில் மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தியத் துணைத் தூதர் தேவயானி (வயது 30), தனது மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் திரும்பியபோது நேற்று கைது செய்யப்பட்டார்.
தனது வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக நியமித்தப் பணிப்பெண்ணுக்கு அமெரிக்க விசா பெறுவதற்கு போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் 15 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தேவயானி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்று, 250,000 டாலர் பிணைத் தொகையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசிடம், அங்குள்ள இந்திய தூதரகம் உடனடியாக கவலை தெரிவித்துக் கொண்டது.
அமெரிக்காவில் இந்தியத் துணைத் தூதர் கைது செய்யப்பட்ட சம்பவம், இந்தியத் தூதரக அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago