உக்ரைன் அதிபர் நீக்கம் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

உக்ரைன் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு அதிபர் விக்டர் யானுகோவிச்சை பதவி நீக்கம் செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மே 25-ம் தேதி அதிபர் தேர்தலை நடத்தவும் நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவில் உள்ள அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு போராட்டக்காரர்களின் ஆதரவா ளர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். முக்கிய எதிர்க் கட்சித் தலைவரான யூலியா டைமோஷேன்கோ சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப் பட்டார். அன்றிரவு அவர் தலைநகர் கீவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்களிடையே உரையாற் றினார்.

இதனிடையே அதிபர் விக்டர் யானுகோவிச்சின் பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பானது. அதில் பேசிய அவர், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், என்னை யாராலும் பதவி நீக்கம் செய்ய முடியாது. தற்போதைய நாடாளுமன்றம் சட்டவிரோதமானது. நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

உலகம்

15 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்