ஆகாயத்திலிருந்து குதித்து 100-வது பிறந்த நாளை கொண்டாடிய அமெரிக்க மூதாட்டி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோவெஸ் கேவ் பகுதியைச் சேர்ந்த எலீனர் கன்னிங்ஹாம் என்ற மூதாட்டி கடந்த சனிக்கிழமை தனது 100-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து (ஸ்கை டைவ்) கொண்டாடினார்.

இதன்மூலம், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் சாதனையை முறியடித்துள்ளார். புஷ் தனது 90-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து கொண்டாடினார்.

3-வது முறை சாகசம்

கன்னிங்ஹாம், கன்சவூர்ட் பகுதியில் ஆகாயத்திலிருந்து குதிப்பதற்கு முன்பு தனது 7 மாத கொள்ளு பேத்திக்கு முத்தமிட்டார். இவர் இத்தகைய சாகசத்தில் ஈடுபட்டது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு தனது 90-வது வயதில் இந்த சாதனையை செய்துள்ளார். நியூயார்க் நகரின் மையப் பகுதியில் உள்ள ஸ்கோ ஹரீயில் உள்ள தனது பேத்தியுடன் வசித்து வருகிறார் கன்னிங்ஹாம்.

முன்னதாக, கன்னிங்ஹாமின் உடல்நிலை ஆகாயத்திலிருந்து குதிப்பதற்கு ஏதுவாக இருப்பதாக அவரது மருத்துவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஆகாயத்திலிருந்து குதித்த மிகவும் வயதானவர் என்ற பெருமையை கன்னிங் ஹாம் பெற்றுள்ளார் என சரடோகா ஸ்கை டைவிங் பயிற்சியாளர் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

5 hours ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்