இளைஞரை அடித்துக் கொன்று சாப்பிட்ட காங்கோ கும்பல்: போராளிகளின் தாக்குதலுக்கு பழி

By ராய்ட்டர்ஸ்

உகாண்டா போராளிகள் தொடர்ந்து அவ்வப்போது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அதற்கு பழிவாங்கும் வகையில் போராளி என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை காங்கோ நாட்டைச் சேர்ந்த கும்பல் கல்லால் அடித்து கொலை செய்தது.

மேலும் அந்த சடலத்தை எரித்ததுடன் மாமிசத்தை அவர்கள் தின்றனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை வட கிழக்கு காங்கோ பகுதியில் உள்ள பேனி பகுதியில் நிகழ்ந்தது. நேரில் பார்த்தவர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். இந்த மாதத்தில் மட்டும் ஏடிஎப்-என்ஏஎல்யு என்கிற தீவிரவாத அமைப்பினர் பேனி பகுதியில் இரவு நேரங்களில் புகுந்து சுமார் 100 பேரை ஆயுதங்களால் தாக்கி கொன்றுள்ளனர். இது தொடர் கதையானதால் பழி தீர்ப்பதற்காக இப்பகுதி மக்கள் காத்திருந்தனர்.

இளைஞர் அடித்துக் கொலை

இந்நிலையில், பஸ்ஸில் வந்த ஒரு இளைஞருக்கு உள்ளூர் மொழி தெரியாமல் திணறியதாலும் அவரிடம் ஆயுதம் இருந்ததாலும் தீவிரவாதி என்ற சந்தேகத் தில் அவரை பஸ்ஸில் வந்த சக பயணிகள் அடித்துக்கொன்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்தனர். இதனிடையே, எம்23 போராளிகள் குழுவுக்கு ஏற்பட்ட கதியே இந்த தீவிரவாதக் குழுவுக்கும் ஏற்படும் என காங்கோ அதிபர் ஜோசப் கபிலா தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். ஐநா ஆதரவுடன் அரசுப் படைகளைக் கொண்டு எம்23 குழுவை தோற்கடித்தது போலவே இந்தக் குழுவினரையும் தோற்கடிப்போம் என உள்ளூர் ஓட்டல் ஒன்றில் பேசும்போது கபிலா கூறினார். உகாண்டா அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்பு ஏடிஎப்-என்ஏஎல்யு. பல்வேறு குழுக்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு அண்டை நாடான காங்கோவில் முகாம் அமைத்து 2000-ம் ஆண்டிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்