தியானன்மென் சதுக்கத் தாக்குதல் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

பெய்ஜிங்கில் உள்ள தியானன் மென் சதுக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது காரை மோதி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தீவிரவாத அமைப்பான துர்கிஸ்தான் இஸ்லாமிக் கட்சி பொறுப்பேற்றுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல்லா மன்சூரின் ஆடியோ சி.டி. வெளியாகியுள்ளது. அதில், சீன அரசாங்கத்தின் மீதான புனிதப் போரின் ஆரம்பம்தான் இதுபோன்ற தாக்குதல்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி தியானன்மென் சதுக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் காரை மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த காரும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த மூவரும், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த சீனக் காவல்துறை, இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்று தெரிவித்தது. இதன் பின்னணியில் தடை செய்யப்பட்ட கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் உள்ளதாக வும் தெரிவித்தது.

இந்த அமைப்பு உய்குர் இன முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தை சீனாவிலிருந்து விடுதலை செய்யும் லட்சியத்துடன் போராடி வருகிறது. இந்த அமைப்புக்கு அல் கொய்தா இயக்கத்தினருடனும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தியானன்மென் தாக்குதலில் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் அவரின் மனைவி ஈடுபட்டதாகக் கூறிய போலீஸார், அவர்களுக்கு உதவி செய்த 5 பேரை கைது செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மன்சூர் வெளி யிட்டுள்ள ஆடியோ சி.டி.யில் கூறியிருப்பதாவது:

உய்குர் போராளிகள் எதிர்காலத்தில் சீன நாடாளுமன்றத்தைத் தாக்கு வார்கள். கிழக்கு துர்கிஸ்தானை கடந்த 60 ஆண்டுகளாக சீனா ஏமாற்றி வருகிறது என்பது தொடர்பாக இப்போது எங்களின் மக்களுக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது. யார் உண்மையான எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

ஜின்ஜியாங்கில் உய்குர் இனத்தவர்கள் (முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தோர்) அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதையடுத்து அங்கு ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உய்குர் இனத்தவர்களால் ஜின்ஜி யாங் மாகாணம் எப்போதுமே பதற்றமே நிறைந்த தாகக் காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்