முன்னாள் போப்பைச் சந்தித்தார் போப் பிரான்ஸிஸ்

By செய்திப்பிரிவு

போப்-ஆக பொறுப்பேற்ற பின் தன் முதல் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் போப் பிரான்ஸிஸ், முன்னாள் போப் 16 ஆம் பெனடிக்டை செவ்வாய்க்கிழமை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

போப் 16 ஆம் பெனடிக்ட்(86) தன் ஓய்வை அறிவித்த பின்னர் வாடிகன் நகரில் உள்ள மலையில் உள்ள மடத்தில் தங்கியுள்ளார். அங்கு சென்ற போப் பிரான்ஸிஸ் தன் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பெனடிக்ட் உடன் இணைந்து பிரார்த்தனை செய்தார்.

போப் பிரான்சிஸ், போப்பாகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன் சக கார்டினல்களுடன் கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியிருந்தார். கத்தோலிக்க தேவாலயத்தை கருவுற்ற தாயுடன் ஒப்பிட்ட அவர், கன்னி மேரியைப் போன்று இந்த தேவாலயமும் இந்த வாரத்தில் ஒரு ஜனனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

அந்த தேவாலயம் கடவுளுக்கான இடமா அல்லது கேளிக்கை விருந்துகள், பொருள்களை வாங்குதல் மற்றும் சப்தங்களை எழுப்புவதற்கான இடமா என அவர் கேள்வியெழுப்பினார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எதிர் நோக்கியிருப்பதையே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். “நகரம் மற்றும் உலகத்துக்கு” (அர்பி எட் ஆர்பி) எனக் குறிப்பிடப்படும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியை போப் பிரான்சிஸ், புனித பீட்டர் சதுக்கத்திலிருந்து புதன்கிழமை காலை 11.30 மணிக்கு விடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்