2 அமெரிக்கர்களுக்கு பத்ம பூஷண் விருது: 2 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பத்மஸ்ரீ

By செய்திப்பிரிவு

அமெரிக்காவைச் சேர்ந்த சூசன்னா ஹோபர் ரூடால்ப், வில்லியம் பென்டன் ஆகிய இரண்டு அமெரிக்கர்களுக்கு இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சிகாகோவில் உள்ள எமிரிட்டா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தவிர அமெரிக்க வாழ் இந்தியர்கள் அசோக் குமார் மாகோ, டாக்டர் சித்தார்த் முகர்ஜி, டாக்டர் வம்சி மோத்தா ஆகியோர் பத்ம ஸ்ரீவிருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக உறவு அதிகரிக்க அசோக் குமார் மாகோ அதிகமாக பங்களித்துள்ளார். டாக்டர் சித்தார்த் முகர்ஜி, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். புற்றுநோய் தொடர் பாக அவர் எழுதிய நூலுக்காக 2011-ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

டாக்டர் வம்சி மோத்தா, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அந்தந்த துறைகளில் அவர்கள் படைத்த சாதனைகளை கவுரவிக்கும் வகையில் பத்ம விருதுக்கு அவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்