பெல்ஜியத்தில் முதல் உலகப்போர் நடந்த போர்க்களங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித மண் லண்டனில் உள்ள புதிய நினைவுத் தோட்டத்தில் சனிக்கிழமை தூவப் பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் உலகப்போரின் 100வது ஆண்டு நினைவு தினத்துக்காக புனித மண் கொண்டுவரப்பட்டது.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சி யில் உலகப்போரின்போது பிரிட் டிஷ் வீரர்களுடன் இணைந்து சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களின் தியாகம் நினைவு கூரப்பட்டது. இந்தஆண்டின் முற்பகுதியில் பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த 1000 பள்ளி மாணவர்கள் பெல்ஜியத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள 70 போர்க்களங்களுக்கு சென்று 70 மூட்டை புனித மண்ணை சேகரித்தனர். இந்த மண் பெல்ஜியம் நாட்டின் கப்பல் மூலம் பிரிட்டனுக்கு வெள்ளிக்கி க்கிழமை வந்து சேர்ந்தது.
குதிரை பூட்டிய ராணுவ வாகனத்தில் இந்த புனித மண் மூட்டை கள் ஏற்றப்பட்டு, பக்கிங்காம் அரண்மனை, செயிண்ட் பால் கதீட்ரல் போன்ற முக்கிய இடங்கள் வழியாக மத்திய லண்டனில் உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் உள்ள புதிய நினைவுத் தோட்டத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
கடந்த மாதம் பெல்ஜியத்தின் ஒய்பிரஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாம் எலிசபெத் ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பிடம் (92) மண் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
1914-1918-ல் நடைபெற்ற உலகப்போரில் உயிரிழந்த காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் வகையில் இந்த மண் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகப் போரில் பிரிட்டிஷ் பேரரசுக்காக பிரிவினைக்கு முந்தைய இந்தியாவிலிருந்து சுமார் 12 லட்சம் வீரர்கள் களம் இறங்கினர். அவர்களில் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.
புதிய நினைவு தோட்டம் பெல்ஜியம் நாட்டின் கட்டடக்கலை தொழில்நுட்ப வல்லுநர் பியட் பிளேங்கர்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டம் அடுத்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்படும்.
முக்கிய செய்திகள்
உலகம்
29 mins ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago