பசிபிக் கடலில் வழிதவறி ஓராண்டுக்குப் பின் மீண்ட மீனவர்

By செய்திப்பிரிவு

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரைச் சேர்ந்த மீனவர் ஜோஸ் சல்வடோர் அல்வரெங்கா(37) மீன் பிடிக்கச் சென்றபோது பசிபிக் கடலில் வழிதவறினார். 13 மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கரை சேர்ந்தார். அவரை உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

“திரும்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என அல்வரெங்கா தெரிவித்தார். கடலில் வழிதவறிய அவர், மீண்டும் கரைக்குத் திரும்ப முடியாமல் தவித்தார். வழியில் ஆமை, மீன் உள்ளிட்டவற்றை பச்சையாகவே உண்டு தன் சிறிய படகில் கடலில் மிதந்துள்ளார்.

சில சமயங்கள் பெரும் கப்பல்களைப் பார்த்தபோது, அவற்றிடமிருந்து உதவி பெற முடியவில்லை. கப்பலில் சென்றவர்கள் என்னைப் பார்த்துக் கையசைத்தனர். ஆனால், உதவ முன்வரவில்லை என்றார்.

தன் மனைவி மகளைப் பிரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்பே அல்வரெங்கா மெக்ஸிகோவில் குடியேறிவிட்டார். அவர் மீண்டு வந்ததும் மனைவி ஆர்லி பர்ரேரா முத்தமிட்டு வரவேற்றார். மகள் பாத்திமா மெபீபா நினைவு தெரிந்த நாளிலிருந்து அல்வரெங்காவைப் பார்த்ததில்லை. தற்போது தன் தந்தையை விட்டுப் பிரியப்போவதில்லை என மெபீபா தெரிவித்துள்ளார்.

மார்ஷல் தீவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே சுமார் 10 ஆயிரம் கி.மீ. தொலைவை சிறிய படகு மூலமே அவர் கடந்து வந்தும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்