இராக்கில் வெடிகுண்டு தாக்குல்: 34 பேர் பலி

By செய்திப்பிரிவு

இராக் தலைநகர் பாக்தாதின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஹிலா என்ற இடத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சோதனை முனையம் அருகே வாகனம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை தற்கொலைப்படை தீவிரவாதி வெடிக்கச் செய்ததாகவும் இதில் 167 பேர் காயமடைந்ததாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் அவ்வழி யாக சென்று கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சிலர் தங்கள் காருக்குள்ளேயே சிக்கி இறந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பாக்தாதின் வடக்குப் பகுதியில் உள்ள 2 சோதனை முனையங்களில் சனிக்கிழமை தீவிரவாதிகள் துப் பாக்கியால் சுட்டதில் 2 பள்ளி மாணவர்கள் மற்றும் 3 போலீஸார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஓராண்டாக இராக்கில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்புப் படையினரை குறி வைத்தும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் இது வரை 1,850 பேர் தீவிரவாத தாக்கு தலுக்கு பலியாகி உள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்