சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிராக துருக்கி வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 10 பேர் பலி

By ஏஎஃப்பி

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் துருக்கி விமானப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் 10 பேர் பலியாகினர்.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட தகவலில்,"சிரியாவின் ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதியான அல்-பாப்பில் வியாழக்கிழமை துருக்கி விமானப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் 10 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, ரஷ்யா மற்றும் துருக்கி படைகள் இணைந்து ஐஎஸ் ஆதிக்கத்தை முறியடிக்க சிரியாவின் அல்-பாப் நகரில் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் இறப்பதாக செய்திகள் வெளியாகியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை துருக்கி அரசு திட்டவட்டமாக மறுத்தது.

ஐஎஸ்ஸுக்கு எதிராக தாங்கள் நடத்தும் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை என்று துருக்கி அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் துருக்கியின் தேசிய ஊடகமான அனாடோலு , "சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 22 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்