மும்பை தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

மும்பை தாக்குதல் வழக்கை வரும் 29-ம் தேதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லஷ்கர் – இ – தொய்பா கமாண்டர் ஸகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை சாட்சியமளித்த குஜ்ரன்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தக வங்கி அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தனது வங்கியில் பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டதாக கூறினார்.

அவரிடம் குறுக்கு விசாரணை செய்த குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “அந்த பணப் பரிவர்த்தனை தீவிரவாத செயல்களுக்குத்தான் பயன்படுத்தப்பட்டது என்பதை எவ்வாறு நிரூபிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.

இந்த விசாரணையை தொடர்ந்து வழக்கை ஜனவரி 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்