உக்ரைன் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்: சீனா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனின் சுயாட்சி பகுதியான கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது செல்லாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா சனிக்கிழமை தீர்மானம் கொண்டுவந்தது. மேலும் பொது வாக்கெடுப்பை உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அங்கீகரிக்க கூடாது எனவும் அத் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. சீனா இதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இதுதொடர் பான கேள்வி ஒன்றுக்கு சீனாவின் வெளியு றவுத் துறை செய்தித் தொடர்பாளர் கின் காங் கூறுகையில், “இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் மோதல் போக்கை கடைபிடிப்பதை சீனா ஏற்கவில்லை. அரசியல் தீர்வு காணப்படுவதையே சீனா விரும்புகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறியிருந்தால் மோதலுக்கு வழியேற்படுத்திவிடும். இது இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

தற்போதைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். பதற்றம் அதிகரிப்பதை தடுக்க கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

7 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

மேலும்