சிங்கப்பூர் கலவரம்: குற்றத்தை ஒப்புக் கொள்ள இந்தியர் முடிவு

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கார வேலு விக்னேஷ் (23), தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறைக்கப்படும் என்று தெரிகிறது.

சிங்கப்பூரில் இந்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. பஸ் மோதி இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதில் 43 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக 57 பேர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 23 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் கடுங்காவலும் பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்நிலையில் சின்னப்பா விஜய ரகுநாத பூபதி (32) என்பவர் கடந்த வாரம் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதனிடையே பூபதியின் நண்பரான விக்னேஷ் என்பவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள முடிவு செய்துள்ளார். வரும் திங்கள்கிழமை விக்னேஷ் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று அவரின் வழக்கறிஞர் லூக்சூமயா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்