தப்பியது ஷினவத்ரா அரசு

By செய்திப்பிரிவு

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் இங்லக் ஷினவத்ரா தலைமையிலான அரசு தப்பியது.

தாய்லாந்தில் பிய் தாய் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று ஆளும் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாள்க ளாக எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் மொத்த உறுப்பி னர்கள் எண்ணிக்கை 492. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 246 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இங்லக் ஷினவத்ராவுக்கு ஆதரவாக 297 உறுப்பினர்களும், எதிராக 134 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தைத் தொடர்ந்து பிரதமர் இங்லக் ஷினவத்ரா பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டங்க ளால் எந்தப் பயனும் ஏற்பட போவ தில்லை. உங்கள் அனைவரின் கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடி யும் என்று பிரதமர் ஷினவத்ரா கூறி யுள்ளார்.

இருப்பினும் அரசுக்கு எதிராக வியாழக்கிழமையும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் ஏராளமான அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. இதனால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

பாங்காக்கில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்குச் செல்லும் மின் வயர்களை போராட்டக்காரர்கள் துண்டித்த தால் அந்த அலுவலகம் இருளில் மூழ்கியது. மாற்று ஏற்பா டாக ஜெனரேட்டர் மூலம் போலீஸ் தலைமை அலுவலகம் இயக்கப்படுகிறது.

இதனிடையே போராட்டக் காரர்களுக்கு எதிராக போலீஸ் படையையோ, ராணுவத்தையோ பயன்படுத்த மாட்டோம் என்று பிரதமர் இங்லக் ஷினவத்ரா திட்ட வட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் ராணுவ நடவடிக்கையால் 90 பேர் உயிரி ழந்தனர். 1900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

திடீர் போராட்டம் வெடித்தது ஏன்?

முன்னாள் பிரதமரும், இங்லக் ஷினவத்ராவின் சகோதரருமான தக்ஷின் ஷினவத்ரா ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினால் பதவி விலகினார்.

தற்போது துபாயில் வசித்து வரும் அவர் அங்கிருந்துகொண்டே தாய்லாந்தை ஆட்டிப்படைப்ப தாகக் கூறப்படுகிறது. இந்த வகையில் இங்லக் ஷின வத்ரா தனது சகோதரரின் ஊதுகுழ

லாக செயல்படுகிறார் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நாடாளுமன்றத்தில் சர்ச்சைக் குரிய மன்னிப்பு மசோதாவை இங்லக் ஷினவத்ரா அண்மையில் கொண்டு வந்தார். இது கீழவையில் நிறைவேற்றப்பட்டபோதிலும், மேலவையில் நிராகரிக்கப்பட்டது.

தனது சகோதரருக்கு சாதகமாக இந்த மசோதாவை பிரதமர் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன் காரணமாகவே தாய்லாந்தில் கிளர்ச்சி வெடித்துள்ளது. -பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்