அதிபர் தேர்தல் செல்லாது என அறிவிப்பு: மாலத்தீவு அதிபருக்கு பின்னடைவு

மாலத்தீவில் அண்மையில் நடைபெற்ற முதல் சுற்று அதிபர் தேர்தல் செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 7ம் தேதி மாலத்தீவில் முதல் சுற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் முகமது வஷீத் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒரு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மாலத்தீவில் நடைபெற்ற முதல் சுற்று அதிபர் தேர்தல் செல்லாது என்றும் நவம்பர் 3ம் தேதிக்கு முன்னர் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் செல்லாது என அறிவிக்கப்பட்ட முதல் சுற்று அதிபர் தேர்தலை இம்மாத 20ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இத்தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் மசூத் இமாத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற அறிவிப்பால் மாலத்தீவு அதிபர் முகமது வஷீதுக்கு பின்னடைவு எற்ப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாலத்தீவு அரசியல் களத்தில் சலசலப்பும் எற்ப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE