நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் 4 பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து நைஜீரிய தேசிய அவசர மேலாண்மை முகமை கூறும்போது, "நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது உஸ்மாண்டி நகரம். இங்குள்ள பேருந்து நிலையத்துக்கு அருகே இன்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணியளவில் 4 பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இதில் 2 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவிலுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அங்குள்ள இளம் பெண்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நைஜீரியாவின் அடமாவா மாகாணத்தில் குழந்தையுடன் வந்த இளம்பெண் தன் உடலில் கட்டப்பட்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் பலர் பலியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago