கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ (87), 9 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
தலைநகர் ஹவானாவில் தனது வீட்டுக்கு அருகே கடந்த புதன்கிழமை நடைபெற்ற `ஸ்டுடியோ சோ ரோமரில்லோ' என்ற கலாசார மையத்தின் திறப்பு விழாவில் காஸ்ட்ரோ கலந்து கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான கிரன்மா செய்தி வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9 மாதங்களாக பொது நிகழ்ச்சியில் காஸ்ட்ரோ கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றிய காஸ்ட்ரோ, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
காஸ்ட்ரோ பொதுமக்கள் முன்னிலையில் தோன்றிய அதே நாளில்தான் கியூபாவின் சர்வாதிகாரியாக திகழ்ந்த புல்ஜென்சியோ பாடிஸ்டாவை, மக்கள் புரட்சி மூலம் பதவியிலிருந்து தூக்கி எறிந்து காஸ்ட்ரோ வெற்றிபெற்றதன் 55-வது ஆண்டு தினமும் கொண்டாடப்பட்டது.
கியூபாவில் 48 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2006-ல் பதவி விலகி, தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் ஹவானாவில் நடைபெற்ற ஒரு பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதன் முறை. எனினும், கியூபாவுக்கு வருகைதந்த வெளிநாட்டு தலைவர்களை சந்தித்தார். பத்திரி கைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். - பி.டி.ஐ.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago