ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி ஆவணப்படம்

By செய்திப்பிரிவு

அந்த 21 வயது இளைஞனைப் பரிசோதித்த மருத்துவர்கள் "இனி கை, கால்களை அசைக்க முடியாது. தானாக எதையும் செய்து கொள்ள முடியாது. வாய்திறந்து பேச முடியாது. வாழும் வரை சக்கர நாற்காலி மட்டும்தான் துணை. அதுவும் சில ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம்" எனக் கைவிரித்து விட்டனர்.

மருத்துவ உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிற்குமே அந்த இளைஞன் ஆச்சரியமளித்தான். தற்போது 71 வயதாகிறது அவருக்கு. வாழ்நாள் பற்றிய கணிப்பை மட்டும் அவர் பொய்யாக்கவில்லை. தற்போது வாழும் விஞ்ஞானிகளில் மிகப் பிரசித்திபெற்றவராக அவர் விளங்குகிறார்.

அண்டப்பெருவெடிப்பு, கருந்துளை கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை அவிழ்த்தார்.

"தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" என்ற அவரது புத்தகம் அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற சாதனையைப் படைத்தது.

ஐசக் நியூட்டன் போன்ற மிகச்சிறந்த விஞ்ஞானிகளால் அலங்கரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் "லூகாஸியன் நாற்காலி" என்ற அதி கௌரவம் மிக்க பதவியும் அவரைத் தேடி வந்தது.

இவ்வளவையும் அவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே சாதித்தார்.

அவர், அண்டவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்(71). இவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், 90 நிமிட ஆவணப்படம் தயாராகியுள்ளது. "ஹாக்கிங்" என்ற பெயரில் தயாராகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி, பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) திரையிடப்பட்டது.

"இந்தப்படம் எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது" என ஆவணப்படத்தின் டிரைலர் காட்சிகளில் கணினி மூலம் உருவாக்கப்பட்ட குரலில் பேசுகிறார் ஹாக்கிங்.

"மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட 50 ஆண்டு காலம் அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். எனது வாழ்நாளை மிகப் பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்கிறேன். காதலில் நான் விழுந்தது, வாழ வேண்டும் என்ற பிடிப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் என் இறுதி நாள் என்றே கழிந்தது. ஆகவே, ஒவ்வொரு நொடியையும் மிக மதிப்பு மிக்கதாகக் கழிக்க வேண்டும் என விரும்பினேன்" என ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

குடும்பம், நண்பர்கள், மாணவப்பருவம் என அவரது வாழ்க்கையை அவரே விவரிப்பது போல படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹாக்கிங்கின் பால்யம், நரம்பு முடக்குவாத நோயால் (ஏஎல்எஸ்) பாதிக்கப்படுவதற்கு முந்தைய மாணவப்பருவம், சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டது, இயந்திரத்தின் உதவியுடன் மட்டுமே பேச முடியும் என்ற நிர்ப்பந்தம் என அவரது வாழ்க்கையை முழுவதுமாக விவரிக்கிறது.

மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்த முதல் மனைவி ஜேன் வைல்டு உள்பட அவர் குடும்பத்தினரின் பிரத்யேக பேட்டி, உலகெங்கும் பயணித்து, அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றியது ஆகியவையும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

இப்படத்தை, ஸ்டீபன் பின்னேகன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த மார்ச் மாதம் க்ஸாஸில் நடைபெற்ற எஸ்எக்ஸ்எஸ்டபிள்யு உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போதும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திரையிடலில்தான் ஹாக்கிங் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்