கனமழையால் பாகிஸ்தானில் 30 பேர் பலி

By ஏபி

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையோரத்தில் சித்ரால் மாவட்டம் உள்ளது. இங்கு, உர்சூன் பகுதியில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு மசூதியும் சில வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

இதில், 4 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாயினர். இதனை, சித்ரால் மாவட்ட மேயர் மாக்பிராத் ஷா உறுதிப் படுத்தியுள்ளார்.

மோசமான பருவநிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி 37 வீடுகள் முழுமையாகவும், 47 வீடுகள் ஓரளவும் சேதமடைந்துள்ளன.

ஒவ்வொரு உயிரிழப்புக்கும் தலா 300 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.21 ஆயிரம்) இழப்பீட்டை மாகாண அரசு அறிவித்துள்ளது.









VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

50 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்