பாகிஸ்தான் அரசின் 4 பேர் அடங்கிய குழுவுக்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.
அரசுத்தரப்பு குழுவின் தலைவர் இர்பான் சித்திக் இதை உறுதிப்படுத்தி உள்ளார். கைபர் பக்துன்கவா இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மற்றொரு அரசு அதிகாரியும் கூறியுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது, அடுத்தடுத்த சுற்று பேச்சு வார்த்தையில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அட்டவணை தயாரிக்கப்படும்.
தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பின் கீழ் இயங்கும் பல்வேறு தீவிரவாத குழுக்கள், பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago