ஏவுகணை சோதனைகளில் எதிர்பார்த்ததைவிட வடகொரியா முன்னேறி வருகிறது: தென் கொரியா

By ராய்ட்டர்ஸ்

வட கொரியா ஏவுகணை சோதனைகளில் எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது என்று தென் கொரியா அச்சம் தெரிவித்துள்ளது.

வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை நடத்தியது. இது புதுவிதமான ஏவுகணை. இந்த ஏவுகணை 700 கிலோ மீட்டர் பாய்ந்து செல்லும் திறனுடையது. இது போன்ற ஏவுகணை சோதனைகளை வடகொரியா எந்த நேரந்திலும், எந்த இடத்திலும் நடத்தும் என அந்நாட்டின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்தது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயல் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் குறித்து தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கூறும்போது, "ஏவுகணை சோதனைகளில் எதிர்பார்த்ததை விட வடகொரியா முன்னேறி வருகிறது. இது தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக வடகொரியா உருவாகியுள்ளது" என்றார்.

முன்னதாக கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பு தெரிவித்த நாடுகளை வடகொரியா குண்டு வீசி தாக்குவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டி வந்தது.

வடகொரியா தாக்குதல் நடத்தினால், அதை சமாளிக்க பசிபிப் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, ரஷ்யா வருத்தம்

கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனை காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளதற்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்