நாசா விமான தளத்தை பயன்படுத்த ரூ.6,960 கோடி வழங்கியது கூகுள்

By ஏபி

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விமான தளத்தை கூகுள் இணையதள நிறுவனம் ரூ.6,960 கோடி அளித்து 60 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் மோபட் விமானத் தளம் உள்ளது. கடற்படைக்காக உருவாக்கப்பட்ட இந்த விமானத் தளம் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 1931 முதல் 2003 வரை விமானத் தளம் கடற்படையின் பயன்பாட்டில் இருந்தது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் விமானத் தளம் முழுமையாக மூடப்பட்டது.

இந்த விமான தளத்தில் 3 மூடிய விமான கூடங்கள், 2 ஓடுபாதைகள், ஒரு கோல்ப் விளையாட்டு மைதானம், அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. தற்போது நாசாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமானதளத்தை கூகுள் நிறுவனம் ரூ.6,960 கோடி அளித்து 60 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது.

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வரும் கூகுள், மோபட் விமான தளத்தை தனது ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவன மூத்த அதிகாரிகள் கூறியபோது, ரூ.1200 கோடியில் விமான தளம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் விண்வெளி ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும், எங்கள் நிறுவனத்தின் விமானங்களை நிறுத்திவைக்கவும் விமான தளத்தைப் பயன்படுத்தி கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

மேலும்