ஆப்கானில் ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா மலையைக் கைப்பற்றிய ஐஎஸ்

By ஏபி

அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப்கானில் பதுங்கி இருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐஎஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஎஸ் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட ஆடியோ பதிவில், "ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த டோரா போரா மலைப்பகுதியில் ஐஎஸ் கொடி பறக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்கள் கைப்பற்றியுள்ளதாகவும். கிராம வாசிகளை அவர்களது இல்லத்திலேயே இருக்குமாறும் ஐ எஸ் இயக்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், செவ்வாய்க்கிழமை தாலிபன்களுக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையே டோரா போரா மலையைக் கைபற்றுவது தொடர்பாக கடும் சண்டை நடைபெற்றது. டோரா போரா மலையைக் கைபற்றியது யார் என்று உறுதிப்படுத்த முடியவில்லை" என்றனர்.

ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் டோரா போரா மலைப் பகுதியைக் கைப்பற்றுவதில் ஐஎஸ் இயக்கத்துக்கும் தாலிபன்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

34 mins ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்