அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடந்த 1-ம் தேதி முதல் கஞ்சா விற்பனைக்கு சட்டபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் முதல்கட்டமாக 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் டென்வரில் 18 கஞ்சா கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முதல்நாளான ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டை புகைத்துக் கொண்டாட ஆண்களும் பெண்களும் கஞ்சா கடைகளின் முன்பு பெருந்திரளாகக் கூடினர். காலை 8 மணிக்குப் பின்னரே கஞ்சா கடைகளைத் திறக்க போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். இருப்பினும் காலை 6 மணி முதலே அனைத்து கடை வாசல்களிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.
கொலராடோ மாகாணத்தில் மட்டுமே கஞ்சா விற்பனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாகாணங்களில் இருந்து ஏராளமானோர் டென்வருக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago