அமெரிக்கர்கள் அறிவியலில் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் பூமி சூரியனைச் சுற்றி வருவது பற்றி 4-ல் ஒருவருக்கு (26%) தெரியவில்லை என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஒரு ஆய்வு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,200 பேரிடம் இயற்பியல் மற்றும் உயிரியல் தொடர்பான 9 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதன்படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 74 சதவீதம் பேர் மட்டுமே சூரியனை பூமி சுற்றி வருவது தெரியும் என கூறினர். இதுபோல, விலங்குகளி லிருந்து பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் தோன்றினான் என்பது 48 சதவீத அமெரிக்கர் கர்களுக்கு மட்டுமே தெரிந் திருந்தது. மேலும், அறிவியல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ஆய்வில் பங்கேற்றவர்களில் 3-ல் ஒருவர் கூறியுள்ளார். மருத்துவக் கண்டுபிடிப்புகளைத் தெரிந்துகொள்ள விரும்புவதாக 90 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு முடிவுகள், அதிபர் ஒபாமா, எம்.பி.க்களிடம் சமர்ப்பிக்கப்படும் தேசிய அறிவியல் அமைப்பின் அறிக்கையில் சேர்க்கப்படும்.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago