சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைநகராக விளங் கும் ரக்கா நகரில் நேற்று முன் தினம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாயினர்.
இதுகுறித்து ‘சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் (எஸ்ஓஎச்ஆர்)’ நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “இந்த தாக்குதலில் மேலும் பலர் காயம் அடைந்தனர். இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த தாக்குதலை யார் நடத்தியது எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளது.
ரக்கா நகரில் ஐ.எஸ். தீவிரவாதி களுக்கு எதிராக சிரியா அரசு, அதன் நட்பு நாடான ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன.
இதனிடையே அமெரிக்க கூட் டணிப் படை விடுத்துள்ள செய்தி யில், “ரக்கா அருகே திங்கள் கிழமை 2 தாக்குதல் நடத்தப்பட்டது. ஜிகாதிகள் பயன்படுத்தி வந்த பாலம் ஒன்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
ரக்கா நகரில் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். தாக்குதலுக்கு எதிரான கேடயங்களாக பொதுமக் களை பயன்படுத்தும் வகையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறு வதற்கு ஐ.எஸ். அனுமதி மறுப்ப தாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
8 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago