இலங்கை அரசியல் எதிரிகள் கொலையில் தொடர்பில்லை: பொன்சேகா புகாருக்கு கோத்தபய மறுப்பு

By ஏஎஃப்பி

இலங்கையில் கடந்த 2005 முதல் 2015 வரை மகிந்த ராஜபக்ச அதிபராக பதவி வகித்தார். அப்போது பல்வேறு நிதி முறை கேடுகள் நடைபெற்றது, 17 பத்திரிகையாளர்கள் உட்பட அரசியல் எதிரிகள் கொல்லப் பட்டது தொடர்பாக, ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப் பினர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா (2005-2009) நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அதில், “ராணுவ உளவு அமைப் பின் சார்பில் மரணப் படை (டெத் ஸ்குவாட்) இயங்கி வந்தது. இந்தப் படையினர் அரசியல் எதிரிகள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கொலை செய்தனர். இதற்கான உத்தரவுகளை முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்தார்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து கோத்தபய கூறும் போது, “பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பொன்சேகா கூறுவது போல் மரணப் படை செயல்பட்டது உண்மையானால், ராணுவ தளபதி என்ற வகையில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்” என கேள்வி எழுப்பி உள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறை யும் தனது அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. அதிலும் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மரணப் படைக்கு தொடர்பு இருப்ப தாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 2009-ல் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா கொலை வழக்கிலும் மரணப் படைக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட் டுள்ளது.

ஆயுத கொள்முதலில் கோத்தபய லஞ்சம் வாங்கிய தாக, லசந்த விக்கிரமதுங்கா தனது பத்திரிகையில் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவர் கொல்லப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்