‘போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு சீர்குலைக்கிறது’: ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் குற்றச்சாட்டு

By பிடிஐ

போர்க்குற்ற விசாரணையை சீர் குலைக்க இலங்கை அரசு முயற் சிக்கிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் சையத் அல் ஹுசைன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரின் போது சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் கொல் லப்பட்டனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன் சில் சார்பில் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. ஆனால் இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க மறுப்பதுடன் தொடர் ந்து இடையூறுகளையும் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் சையத் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு இலங்கை அரசிடம் ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள் ளது. ஆனால் ஐ.நா.வின் கோரிக் கைக்கு இலங்கை அரசு செவி சாய்க்க மறுத்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நா. விசாரணை குழுவிடம் வாக்கு மூலம் அளிப்பதை இலங்கை அரசு தடுக்கிறது. விசாரணையை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் எதற் காக விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசின்ஹா மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: ஐ.நா. சபையின் கண்ணியம் மிக்க உறுப்பு நாடுகளில் இலங்கை யும் ஒன்று. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

இலங்கையின் இறை யாண்மை, ஒருமைப்பாட் டைக் காப்பாற்றுவதில் அரசுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதற்கேற்பத்தான் அரசு செயல்பட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்