அயல்நாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்பதே முன்னுரிமை: பிரதமர் மோடி

By பிடிஐ

அயல்நாட்டில் பதுக்கப்படும் கருப்புப் பணம் என்பது நாட்டின் ‘பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் சவால்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் தலைவர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

5 நாடுகள் அணியான பிரிக்ஸ் தலைவர்களை ஜி-20 மாநாட்டுக்கிடையில் சந்தித்துப் பேசிய மோடி, அயல்நாடுகளில் பதுக்கி வைக்கப்படும் கருப்புப் பணம் நாட்டின் பாதுகாப்புக்கு விடப்படும் சவால் என்றும், கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதே தனது அரசின் முக்கியமான முன்னுரிமை என்றும் கூறியுள்ளார்.

இதற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"என்னைப் பொறுத்தவரையில் இந்த மாநாட்டில் நான் கோர விரும்புவதெல்லாம், கருப்புப் பணத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்பதே” என்றார் மோடி.

எல்லை தாண்டிய வரி ஏய்ப்பு மற்றும் அபரிமிதமான வரிச்சலுகைகளும் தனது அரசின் முக்கியப் பிரச்சினையாகும் என்று அவர் பிரிக்ஸ் தலைவர்களிடம் தெரிவித்தார்.

மோடியைத் தவிர இந்தச் சந்திப்பில், சீன அதிபர் ஸீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஸூமா, பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

59 mins ago

உலகம்

4 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்