சீனாவில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் லியூ ஜியோபோ கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
இதையடுத்து மருத்துவ சிகிச்சை பெற அவரை சீன அரசு சிறையில் இருந்து பரோலில் விடுவித்துள்ளது.
லியூவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கடந்த மாதம் 23-ம் தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதற்கு அடுத்த சில நாட்களில் சிகிச்சைக்காக சிறையில் இருந்து பரோல் மூலம் விடுவிக்கப்பட்டார். தற்போது லியூ வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் உள்ள ஷென்யாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார். எழுத்தாளரும், அரசியல் விமர் சகரும், மனித உரிமை ஆர்வலருமான லியூ, அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க பொதுமக்களைத் தூண்டியதாக குற்றம்சாட்டி கடந்த 2009-ல் சீன அரசு கைது செய்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago