தெற்கு கரோலினா ஆளுநர் இந்தியா பயணம்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

By பிடிஐ

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக 2-வது முறையாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த நிக்கி ஹாலே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தனது மாநிலத்துக்கு முதலீடு களை ஈர்க்கவும், சுற்றுலாவை விளம்பரப்படுத்தவும் அவர் திட்ட மிட்டுள்ளார்.

10 நாள் பயணம்

நிக்கி ஹாலேவும் அவரது குழுவினரும் 10 நாள் பயணமாக வரும் 11-ம் தேதி இந்தியா வருகின்றனர். புதுடெல்லி, ஹைதராபாத், அமிர்தசரஸ், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் 90-க்கும் மேற்பட்ட சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் தெற்கு கரோலினா செயல்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நிக்கி ஹாலேவின் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வர்த்தக வரைபடத்தில்..

இதுகுறித்து மாகாண வர்த்த கத்துறை அமைச்சர் பாபி ஹிட் கூறும்போது, “இந்திய வர்த்தக வரைபடத்தில் தெற்கு கரோலினா இடம் பெறச் செய்வதே இந்தப் பயணத்தின் நோக்கம்.

தெற்கு கரோலினா வர்த்தகம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்திய நிறுவனங்களிடம் எடுத்துக் கூறுவோம்.

மேலும் இங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை இந்தியர்கள் அறியச் செய்வதும் இந்தப் பயணத்தின் நோக்கம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்