சுமார் 14 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் பல் ஒன்று ஆய்வாளர்களால் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தாவிர உண்ணி வரிசையைச் சேர்ந்த ‘பறவை இடுப்பு' டைனோசர் வகை உயிரினத்தின் பல் என்று கூறப்படுகிறது.
சுமார் 13 மிமீ நீளமும், 10.5 மிமீ அகலமும் கொண்ட இந்தப் பல், மலேசியப் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆய்வாளரான மசா டோஷி சோன் குழுவினரால் பஹாங் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ஆய்வில், வசேதா பல் கலைக்கழகம் மற்றும் குமா மோட்டோ பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு ஜப்பானியப் பல்கலைக்கழகங்களும் கலந்து கொண்டன.
இதுகுறித்து மசாடோஷி சோன் கூறியது, ‘‘பஹாங் மாகாணத் தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் தொடர்பான படிமங்கள் குறித்து ஆய்வைத் தொடங்கினோம். 2012ம் ஆண்டு சுமார் 7 கோடி ஆண்டுகள் பழமையான முதல் டைனோசர் படிமம் கிடைத்த இடத்துக்கு அருகில் இந்தப் பல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது" என்றார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல், ‘பறவை இடுப்பு' அமைப்பு கொண்ட டைனோசரின் பல் ஆகும். அந்த டைனோசர் தாவிர உண்ணியாகும். அது குதிரையின் உயரத்துக்கு இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago